தொடர்ந்து 2வது நாளாக சரிந்த சென்செக்ஸ்: இன்றைய நிலவரம் என்ன?
வெள்ளி, 18 நவம்பர் 2022 (09:39 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சுமார் 200 புள்ளிகள் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக மும்பை பங்கு சந்தை சரிவுடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சுமார் 80 புள்ளிகள் சரிந்து 61 ஆயிரத்து 670 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 30 புள்ளிகள் சரிந்து 18316 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இரண்டு நாட்களாக பங்குச் சந்தை சரிவுடன் காணப்பட்டாலும் மிகக் குறைந்த அளவே சரிந்ததால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் வரும் திங்கள் முதல் பங்குச்சந்தை மீண்டும் உயர வாய்ப்பு உள்ளதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்