500 புள்ளிகளுக்கும் மேல் திடீரென சரிந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

திங்கள், 21 நவம்பர் 2022 (09:46 IST)
கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் இன்று திடீரென வாரத்தின் முதல் நாளிலேயே 500 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்றைய மும்பை பங்கு சந்தை சற்றுமுன் தொடங்கிய நிலையில் 520 புள்ளிகள் புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளது. இதனை அடுத்து சென்செக்ஸ் 61150 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய சார்ந்த 145 புள்ளிகள் சரிந்து 18162 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வாரத்தின் முதல் நாளிலேயே சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு  மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் வரும் நாட்களில் பங்குச்சந்தை உயர வாய்ப்புள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்