கடந்த சில நாட்களாகவே மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் இருந்துவரும் நிலையில் நேற்று மும்பை பங்குச் சந்தை வரலாறு காணாத ஏற்றம் அடைந்தது. ஆம், சென்செக்ஸ் முன்னதாக 400 புள்ளிகள் உயர்ந்து 60,285 புள்ளிகளில் வர்த்தகமானது.
இந்நிலையில் தற்போது மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 513 புள்ளிகள் உயர்ந்து 61,819 புள்ளிகளில் வணிகம் தொடங்கியுள்ளது. இதேபோல தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 144 புள்ளிகள் உயர்ந்து 18,482 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.