பிளிப்கார்ட் தளத்தின் பிளாஷ் விற்பனையில் லீ இகோ லீ2 சூப்பர்போன்

செவ்வாய், 12 ஜூலை 2016 (16:18 IST)
லீ 1 மற்றும் லீ மேக்ஸ் 2 கருவிகளின் நல்ல வரவேற்பை தொடர்ந்து லீ இகோ நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை சூப்பர்போன் கருவிகளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
லி இகோவின் லீ 2 கருவியின் வடிவமைப்பு மற்றும் அழகான தோற்றம் பார்ப்பவர்களைக் கவரும் வகையில் இருக்கின்றது. இந்தக் கருவியில் 5.5 இன்ச் FHD டிஸ்ப்ளே (5.5 Inch FHD Display), குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 பிராசஸர்(Qualcom Snapdragon processor , 3 ஜிபி ராம்(3GB RAM), 32 ஜிபி இன்டர்னல் மெமரி(32 GB Internal Memory), 3000 mAhz திறன் கொண்ட பேட்டரி(3000 mAhz Battery), 16 எம்பி பிரைமரி கேமரா(16 MB Primary Camera), 8 எம்பி முன்பக்க கேமராவும்(8 MB Front Camera) வழங்கப்பட்டுள்ளது. அதோடு தரமான அம்சங்களுடன் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

லீ 2 கருவிகளைப் பிளிப்கார்ட் தளத்தின் பிளாஷ் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் கொள்முதல் செய்வோருக்கு  வோடாஃபோன் சேவையில் டபுள் டேட்டா சலுகையை பெற முடியும்.
 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்