தங்கத்தின் விலை குறைந்தது: இன்று எவ்வளவு தெரியுமா??
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (11:02 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்றும் இதன் விலை குறைந்துள்ளது.
சமீப நாட்களாக கொரோனா காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததை தொடர்ந்து தங்கம் விலை இமாலய உச்சத்தை அடைந்தது. இதனால் தங்கம் வாங்குவதே கனவாக போய் விடுமோ என மக்கள் அஞ்சிய நிலையில் தங்கம் விலை தற்போது வேகமாக குறைய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.40,568க்கு விற்பனை ஆகிறது. அதேபோல கிராமுக்கு ரூ.29 குறைந்து ரூ.5,071-க்கு விற்பனை ஆகிறது.