ரூ 30,000 - விண்ணைத் தொட்டது தங்கத்தின் விலை

சனி, 30 ஏப்ரல் 2016 (01:20 IST)
தங்கத்தின் விலை 30 ஆயிரமாக அதிகரித்துள்ளதால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 

 
உலக நாடுகளில் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், தங்கத்தின் விலை தற்போது திடீரென உயர்ந்துள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 30 ஆயிரத்து 250 ஆக அதிகரித்தது.
 
இதே போல, வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ 600 அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி ரூ 41ஆயிரத்து 600க்கு விற்பனையாகிறது.
 
தங்கம் விலை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் கடுமையாக உயர்ந்துள்ளதால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்