இன்று ஒரே நாளில், ஒரு சவரனுக்கு 2000 ரூபாய்க்கும் அதிகமாக தங்கம் விலை ஏறி உள்ளதுடன், இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வரலாறு காணாத உச்சம் என நகை வியாபாரிகள் கூறி வருகின்றனர், இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பது தெரிந்ததே. சமீபத்தில் தங்கத்தின் விலை 70 ஆயிரத்தை கடந்த நிலையில், தற்போது 74 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு 275 ரூபாயும், ஒரு சவரனுக்கு 2200 ரூபாயும் உயர்ந்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தங்கம் விலை உயர்ந்தாலும் வெள்ளியின் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய நிலையே இன்றும் வெள்ளி விற்பனையாகி வருகிறது. .
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,015
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,290
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,120
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,320
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,834
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,134
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 78,672
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,072
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.111.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.111,000.00