இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

Siva

செவ்வாய், 8 ஜூலை 2025 (11:46 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கதுடன் உள்ள நிலையில் நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 50 ரூபாயும், சவரனுக்கு 400 ரூபாயும் இறங்கிய நிலையில், இன்று அதே அளவில் விலை ஏறி உள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தங்கம் விலையில் மாற்றம் இருந்தாலும், வெள்ளி விலையில் கடந்த ஐந்து நாட்களாக மாற்றமில்லை என்பதும், நேற்றைய விலையில்தான் இன்றும் விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் ஒரு சவரன் எவ்வளவு, ஒரு கிலோ வெள்ளி எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,010 
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,060
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,080 
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,480
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,829 
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,883
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 78,632  
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  79,064
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.120.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.120,000.00
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்