தங்கம் உற்பத்தியில் முன்னிலையில் இல்லாவிட்டாலும் தங்கத்தை நுகர்வதில் உலகில் 2வது பெரிய நாடாக இந்தியா இருந்து வருகிறது. அத்தகைய இந்தியாவில் 2018-ம் ஆண்டு குறைந்துள்ள தங்க இறக்குமதியும, அதிகரித்து வரும் விலையும் அதிர்ச்சியை அளித்துள்ளன. இதனால் இந்தியர்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் குறைந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த இறக்குமதிக் குறைவிற்குக் காரணமாக இந்திய ரூபாயின் வீழ்ச்சியும் தங்கம் வாங்க அதிக பணம் செலவு செய்ய வேண்டியிருப்பதும் கூறப்படுகிறது. மேலும் பணப்புழக்கம் குறிந்துள்ளதாலும், தங்கம் வாங்குவதற்கு அரசு நிர்ணயித்துள்ள அளவுகோல்கள் ஆகியவையும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.