சிவராத்திரி தனத்தன்று இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்கவேண்டும். அதன் பின் தீட்சை தந்த குருவைப் பூஜை செய்துவிட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் உணவு உண்ண வேண்டும்.