எப்போதும் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருந்தாலும், வார விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கு திட்டமிடுங்கள்.
பொதுவாக வேலையையும், அது சார்ந்த டென்ஷன்களையும் மறக்க ஓய்வு அவசியம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்களது ஓய்வு நாட்களைக் கழிக்க விரும்புவார்கள். ஒரு சிலர் நாள் முழுக்க தூங்கி எழுந்தால் அதுதான் ஓய்வு என்று எண்ணுவார்கள்.
WD
பலரும், ஓய்வு நாளில் புத்துணர்ச்சியாக வெளியிடங்களுக்குச் சென்று மனதை உற்சாகப்படுத்த விரும்புவார்கள். எது எப்படி இருந்தாலும், விடுமுறை நாட்களிலும் அலுவலகத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், கிடைக்கக் கூடிய ஓய்வை பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
பொதுவாக வார இறுதியில் திரைப்படங்களுக்கோ, உறவினர் அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ சென்று வரலாம். இது ஒரு நாளில் செலவிடப்படும் குறைந்தபட்ச மணி நேரம்தான் என்றாலும் உங்களுக்கு புத்துணர்ச்சி நிச்சயம் கிட்டும்.
WD
இதன் மூலம் கிடைக்கும் புத்துணர்ச்சி தான் அடுத்த ஆறு நாட்களுக்கு சோர்வு இல்லாமல் வேலையை சிறப்பாகச் செய்ய உதவும்.