வீட்டிற்குத் தேவையானவை, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதி, மின்சார வசதி என பல விஷயங்களை செய்து கொடுக்கும் அரசு, கணவன்-மனைவி விவகாரத்து ஆவதைக் கூடத் தடுக்க நடவடிக்கை எடுக்குமா?
ஆம் எடுத்துள்ளதே மலேசியாவின் மாநில அரசு!
மலேசியாவில் தெரங்கான் என்ற மாநிலத்தில் தற்போது விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. விவாகரத்து என்றால் ஏதோ கருத்து வேறுபாடு, வாழ முடியாத நிலை என்றால் பரவாயில்லை.
கணவனின் வியர்வை நாற்றம் தாங்க முடியவில்லை. விவாகரத்து கொடுங்கள், எப்போ பார்த்தாலும் அழுக்கு பைஜாமாவோடு திரிகிறார் எனக்குப் பிடிக்கவில்லை விவாகரத்து கொடுங்கள், இரவில் குறட்டை விடும் மனைவியிடம் இருந்து விவாகரத்து கொடுங்கள் என உப்புசப்பு இல்லாதவற்றுக்கு எல்லாம் விவாகரத்து செய்வது அதிகரித்து வருகிறது.
இதனைத் தடுக்க என்ன செய்வது? தம்பதிகளை விவாகரத்தில் இருந்து எப்படி விலக்கி வைப்பது, திருமணங்களை எப்படி வாழவைப்பது என்று மலேசிய அரசு பல்வேறு வகைகளிலும் யோசித்து வருகிறது. அதற்காக பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அவற்றுள் ஒன்று, பாலியல் உணர்வை தூண்டக்கூடிய நறுமணப்பொருள்களை (செண்டு) உற்பத்தி செய்யும்படி வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அரசாங்கம் கேட்டுக்கொண்டு உள்ளது.
அது மட்டுமல்ல... கணவனையும், மனைவியையும் சேர்ந்து குளிக்கும்படியும் அரசாங்கம் கேட்டுக்கொண்டு உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் விவாகரத்து எண்ணிக்கையை குறைக்கும் என்று நம்புவதாக அந்த மாநில அரசு தெரிவித்து உள்ளது.