எப்போதும் எதையாவது ஒன்றை சொல்லி நச்சரிப்பூது. எந்த ஒரு மனிதரும் அதிகம் பார்த்துப் பயப்படுவது இந்தப் பெண்ணைத்தான். இந்தப் பெண் சளசளவென்று புகார் மழை பொழிபவளாகவும், எப்போது திருமணம் செய்துகொள்ளலாம் என்று நச்சரித்துக் கொண்டே இருப்பவளாகவும் இருப்பாள். அவள் ஓர் உறவுக்குள் விழுந்து, பாதுகாப்பாக உணர்ந்தபின், தனது தேவைகளை அடுக்கத் தொடங்குவாள்.
ஒருநாளைக்கு ஓர் ஆணை விட ஒரு பெண் அதிகமாக ஆயிரம் வார்த்தைகள் பேசுகிறாள் என்பது பொதுவான கருத்து. பல பெண்கள் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். `பெண் என்றாலே அதிகமாகப் பேசுவாள்' என்றில்லாமல், தங்களுக்கு விருப்பமான விஷயங்களை பெண்கள் எளிமையாகப் பேசுகிறார்கள் என்பதே நடைமுறை உண்மை.