[$--lok#2019#state#tamil_nadu--$]
முக்கிய வேட்பாளர்கள்: எச்.ராஜா (பாஜக)- கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்)
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் சிவகங்கை தொகுதியும் ஒன்று. இத்தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி சார்பில் எச்.ராஜா (பாரதிய ஜனதா கட்சி ), திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி சார்பில் கார்த்தி சிதம்பரம் (இந்திய தேசிய காங்கிரஸ் )போட்டிடுவதால் இத்தொகுதியின் பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் 73 சதவீத மக்கள் வாக்களித்தனர். சிவகங்கை தொகுதியின் மக்கள் தொகை 18,67,198, இதில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,29,698. இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,56,734, ஆகும். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,72,905 ஆகும். கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்நாதன் தற்போது சிவகங்கை எம்பியாக உள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் துரைராஜ் சுபா என்பவரை 2,29,385வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.