இந்நிலையில் காலை 9:30 முதல் ஆந்திராவில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குபதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன நிலையில் பெரும்பாலான மக்கள் ஒட்டு போடாமல் சென்றனர். எனவே தேர்தல் நேரத்தை நீட்டிக்க வேண்டுமெனவும், மறுதேர்தல் நடத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஆந்திரமுதல்வர் சந்திரபாபுநாயுடு கடிதம் எழுதியுள்ளார்.