ஆரம்பத்திலேயே எண்ட் கார்டா!!! தேர்தல் பிரச்சாரத்தில் நடந்த அபசகுணம்: பொன்னார் கடும் அப்செட்!!

ஞாயிறு, 24 மார்ச் 2019 (08:57 IST)
பாஜக தேர்தல் பிரச்சார வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதால் பாஜகவினர் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
 
தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக தலைமையில் பாமக, பாஜக, மற்றும் தேமுதிக ஆகியக் கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. தேர்தல் நெருங்குவதால் திமுக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் பாஜக சார்பில் கன்னியாகுமரியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று கன்னியாகுமரியில் தனது பிரச்சாரத்தை தொடங்கவிருக்கிறார். இதற்கிடையே சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தேர்தல் பிரசாரத்திற்கான வாகனம் உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் வண்டியை சீஸ் செய்து வட்டாட்சியர் அலுவலகரிடம் ஒப்படைத்தனர். இதனால் பொன்னாரும் பாஜகவினரும் கடும் அதிர்ச்சியும் அதிருப்திக்கும் ஆளாகியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்