திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குமக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை உள்ளன.
திமுக, தன்னுடைய கூட்டணி கட்சிக்கு 19 தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கூட்டணி கட்சிகளுக்கு 20 இடங்களை ஒதுக்கிய நிலையில் இந்த முறை ஒரு இடம் குறைத்து ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். காங்கிரஸ், மதிமுகவுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகள் குறித்தும், மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் பட்டியல் குறித்தும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.