விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பு..! திமுக வழக்கில் தேர்தல் தேர்தல் ஆணையத்துக்கு அதிரடி உத்தரவு...!!

Senthil Velan

திங்கள், 15 ஏப்ரல் 2024 (13:00 IST)
தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் விளக்கமளிக்க தேர்தல்  ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கறிஞர் எஸ்.மனுராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில்  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் செய்யப்பட்டுள்ள முக்கிய சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக தேர்தல் விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த விளம்பரங்களுக்கு முன் அனுமதி கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவு எடுக்க 6 நாட்கள் வரை காலதாமதம் செய்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
 
சில விண்ணப்பங்களை ஒன்றுமில்லாத அற்ப காரணங்களுக்காக நிராகரித்துள்ளது என்றும் குறிப்பாக இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்ற தேர்தல் விளம்பரத்துக்கு முன் அனுமதி கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை, நாட்டின் இறையாண்மைக்கு எதிராக உள்ளதாகக் கூறி தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மேல்முறையீடு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி வழங்க மறுத்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். அதேபோல திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுக்கும் மாநில அளவிலான குழுவின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

ALSO READ: எடப்பாடி பழனிச்சாமி பிரதமராக வாய்ப்பு..! கேப்டனின் மறு உருவம் விஜய பிரபாகரன்.! பிரேமலதா....
 
இந்த விதிமுறை முந்தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டதா என ஏப்ரல் 17ம் தேதி விளக்கமளிக்க தேர்தல்  ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்