ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், ஓபிஎஸ் என்ற பெயரில் மேலும் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
அதேபோல் ராமநாதபுரம் அருகே உள்ள தெற்கு காட்டூர் பகுதியைச் சார்ந்த ஒய்யாரம் மகன் ஓ. பன்னீர்செல்வம் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மேலும் இரண்டு பேர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் ராமநாதபுரத்தில் ஓ பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் போட்டியிடுகின்றனர்.