இந்த மோசடியில் அப்போது காங்கிரஸ் தலைமையில் முதல்வராக இருந்த உம்மண் சாண்டிக்கும் மேலும் சில அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார் சரிதா நாயர். மேலும் தமக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கூறி பரபரப்பைக் கிளப்பினார். இதனால் அப்போது முதல்வராக இருந்த உம்மன் சாண்டியின் உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உட்பட சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சரிதா நாயர் மீது இது தொடர்பான வழக்குகள் திருவனந்தபுரம், பெரும்பாவூர், கோவை உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் உள்ளன.