இந்த செய்தி வெளியானதும் சமூகவலைதளங்களில் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் பிராத்தனைகள் மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த 10 மாதங்களாக நடந்துவந்த சிகிச்சை முடிந்து அவர் இப்போது நாடு திரும்பியுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அவர் பூரண குணமடைந்துள்ளார். இந்நிலையில் தனக்குத் துணை நின்ற ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தனது டிவிட்டரில் ‘வெற்றியை நோக்கி செல்வதில் நாம் நேசிக்கப்படுவதை மறந்து விடுகிறோம். சோதனை காலங்களில் இது நமக்கு நினைவுபடுத்தப்படுகிறது. எனது தடங்களை இந்த வாழ்க்கையில் விட்டுச் செல்வதற்கு முன் உங்களது அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றியுள்ளவனாக இருக்க நான் கடமைப்பட்டுள்ளேன். அதுவே என்னை குணமடையத் தூண்டியது. நான் மீண்டும் உங்களிடம் திரும்பி வந்து இருக்கிறேன். எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.