உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா என நகங்களை வைத்தே தெரிந்துக்கொள்ள முடியுமா...?

புதன், 14 செப்டம்பர் 2022 (17:27 IST)
உடம்பு ஆரோக்கியமாக இருக்கிறதா, இல்லையா என்பதை நகத்தைப் பார்த்தே சொல்லி விடலாம். நகத்திற்கு உள்ளே தெரியும் நிறத்தை வைத்தே, என்ன நோய் இருக்கும் என்று ஒரளவு கண்டுபிடித்து விடலாம்.


கைவிரல் நகங்களைப் பார்த்தே, உடலில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்றும் கண்டு பிடித்து விடலாம்.

நகங்களின் குறுக்கே, அதிக பள்ளமான கோடுகள் தெரிந்தால் வயதாகிவிட்டது என்று அர்த்தம் நகத்தின் இயற்கை நிறம் போய், வேறு நிறம் தென்பட்டாலோ, மிகமிக மெல்லியதாக இருந்தாலோ, பள்ளமான கோடுகள் இருந்தாலோ, வெடிப்பு இருந்தாலோ லேசாக வளைந்திருந்தாலோ, உடலில் ஏதோவொரு இடத்தில் நோய் இருக்கிறது என்பதை காட்டும் அறிகுறியாகும்.

சிலருக்கு நகம் அதனுடைய இயற்கையான நிறத்தில் இல்லாமல், நிறம் மாறி, அழுக்காக இருப்பது போல் தோன்றும். “பங்கஸ்” என்று சொல்லக்கூடிய ஒருவகை கிருமியினால் ஏற்படும் நோயே, நகத்தை இவ்வாறு பாதிக்கச் செய்கிறது.

ரத்தத்தில் இருக்க வேண்டிய ஆக்ஸிஜன் அளவு மிக குறைவாக காணப்பட்டால் கைவிரல் நகம் நீல நிறத்தில் காணப்படும். அப்படி இருந்தால் “சயனோஸி” என்று சொல்லப்படும் நோயின் அறிகுறி இருக்கிறதென்று அர்த்தம்.

இருதய நோய் ,நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு கைவிரல் நகங்கள் குவிந்து, பருத்து, பளபளவென்று முருங்கைக்காய் போன்று இருக்கும். இதை “க்ளப்பிங்” நோய் என்று கூறுகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்