அந்த நிலையில்தான் இருக்கிறார் தமிழ் நடிகரைக் கல்யாணம் செய்துகொண்ட வடநாட்டு நடிகை. மாமனார், கணவர், கொழுந்தன் என மூன்று நடிகர்கள் ஒரே வீட்டில் இருந்தாலும், திருமணத்துக்குப் பிறகு சில காலம் நடிக்காமல் இருந்தார். ஆனால், ஒருகட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல், டீசண்டான ரோல்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், படத்தில் நடிக்கும் கேரக்டர்கள் போலவே நிஜத்திலும் சுதந்திரமாக சிறகடித்துப் பறக்க ஆசைப்படுகிறாராம். அதன் வெளிப்பாடுதான் மேடையில் தன் கணவரையே கலாய்த்துப் பேசியது என்கிறார்கள். இது எங்கபோய் முடியப்போகுதோ…