ரோஷத்தை விட்டுவிடாத நடிகர்

வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (13:21 IST)
வருகிற 28ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகப் போகிறது பிரமாண்டமான படம். அனைவரும் ஆர்வத்தோடு காத்திருக்கும் நிலையில், கர்நாடகாவில் மட்டும் எதிர்ப்பு. அந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒரு நடிகர் மன்னிப்பு கேட்டால்தான் படம் ரிலீஸாகும் என அங்குள்ளவர்கள் கோரிக்கை வைக்க, என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றது படக்குழு. 

 
நேற்று படத்தின் இயக்குநர், ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அதில், நடிகருக்கும், அந்தப் படத்துக்கும் ஒரு சம்பந்தமும்  இல்லை என்றும், ரிலீஸாகவில்லை என்றால் பாதிக்கப்படுவது தயாரிப்பாளரும், இயக்குநரும்தான் என்பதை விளக்கினார்.  இந்நிலையில், இன்று வீடியோ மூலம் அந்த நடிகர் கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்தார். இதனால், அந்தப் படத்துக்கு  உள்ள சிக்கல் விலகும் எனத் தெரிகிறது. 
 
ஆனால், எதிர்காலத்தில் மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுப்பேன் என்று கூறியுள்ள நடிகர், அப்படி பிரச்னை வருமென  நினைத்தால், என்னைப் போன்ற சின்ன நடிகரை வைத்து யாரும் படமெடுக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்