மகாபிரபு தனுஷ்! நீங்க இந்த குடும்பத்திலயும் வந்துட்டிங்களா? கலாய்க்கும் நெட்டிஸன்கள்

செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (05:18 IST)
கடந்த சில மாதங்களாக எந்த பிரபலம் விவாகரத்து என்றாலும் அதற்கு தனுஷ்தான் காரணம் என்பது போல் நெட்டிஸ்னகள் மிமி கிரியேட் செய்வது வழக்கமாக ஒன்றாகிவிட்டது. அமலாபால், செளந்தர்யா ரஜினி உள்பட ஒருசிலர் விவாகரத்து செய்யும்போது அதற்கு தனுஷ் பெயர் அடிபட்டது என்பது தெரிந்ததே



 


இந்த நிலையில் தற்போது ரேவதியுடன் தனுஷ் உள்ள புகைப்படம் வெளியானதை தொடர்ந்து நெட்டிஸன்கள் மீண்டும் தங்கள் வேலையை தொடங்கிவிட்டனர். சீனியர் பூந்தென்றலுடன் ஜூனியர் பவர் பாண்டி என்று செளந்தர்யா ரஜினி போட்ட இந்த புகைப்படத்தை வைத்து நெட்டிஸன்கள் வச்சு செஞ்சுகிட்டு இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

'மகாபிரபு! நீங்க இந்த குடும்பத்திலயும் வந்துட்டிங்களா?, சுசித்ராவுக்கு அடுத்த வீடியோ எடுக்குற வேலை வந்துருச்சு' என்பது உள்பட இதே ரீதியில் பல போஸ்ட்கள், கமெண்ட்கள் மற்றும் மிமிக்கள் சமூக வலைத்தளங்களில் உலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்