இந்த முறையாவது ரசிகர்களைச் சந்திப்பாரா உச்ச நட்சத்திரம்?

வியாழன், 11 மே 2017 (17:44 IST)
தனக்குப் பிடித்த நடிகனைக் கொண்டாடும் ரசிகர்களுக்கு மத்தியில், அந்த நடிகர்களே கொண்டாடும் நடிகர்தான் உச்ச நட்சத்திரம். அவரைக் கடவுளாக நினைப்பவர்களும், அவர் முகத்தை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட மாட்டோமா என ஏங்குபவர்கள் எக்கச்சக்கம். இதற்காகவே ரசிகர்களைச் சந்தித்து வந்த அவர், கடந்து 8 வருடங்களாக சில சூழ்நிலைகளால் ரசிகர்களைச்  சந்திக்கவில்லை.

 
இந்த வருடமே சில முறை பிளான் செய்தும், தேதி அறிவித்தும் ரசிகர்களை அவரால் சந்திக்க முடியவில்லை. அதற்கான  காரணம் என்னவென்றும் தெரியவில்லை. எனவே, தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் தேதியிலாவது சந்திப்பாரா இல்லை  வழக்கம்போல போக்குகாட்டி விடுவாரா என்ற சந்தேகத்துடனேயே நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்