தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இந்த நடிகை, தேசியக்கட்சி தலைவர் மகன் ஒருவரின் பெயரை முன்பாதியாகக் கொண்டவர். இவர் ஆரம்பத்தில் தமிழ்ப் படங்களில் நடித்தபோது சீண்டுவார் இல்லை. ஆனால், தெலுங்கில் முன்னணி நடிகையான பிறகு, தற்போது இரண்டு பெரிய தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு, சாப்பாட்டுக்கு கூட ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறாராம் இந்த நடிகை. எனவே, சினிமாவில் ஏதாவது பிரச்னை என்றால், அதை எதிர்கொள்ள அந்த அனுபவம்தான் பயன்படுகிறது என்கிறார். ஷூட்டிங்கிற்காக வெளியூர் செல்லும்போது, சுவையான சாப்பாடு இல்லை, வசதியான தங்குமிடம் இல்லை என்றெல்லாம் கவலைப்படவோ, சண்டை போடவோ மாட்டாராம். நடிகை என்றால் இதெல்லாவற்றையும் அட்ஜெஸ்ட் செய்துகொள்ள வேண்டும் என்கிறார் நடிகை.