இங்கிலாந்து இறக்குமதி செய்யப்பட்ட பட்டணத்து நடிகை, பாலிவுட்டில் சில படங்கள் நடித்தார். அப்போது அவருடன் நடித்த ஒரு ஹீரோவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டதாம். காதலனின் பெயரை தன் கையில் பச்சைக் குத்திக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் காதல் சென்றது.
ஆனால், நாளடைவில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், காதல் முறிந்து போனது. இதில் நடிகை மட்டும் அவரின் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், காதல் தோல்வியை தாங்க முடியாத நடிகர், போதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறாராம். மேலும், அவரின் காதல் கதையை புத்தமாக வெளியிட முடிவு செய்துள்ளாராம்.