2020 ஆம் ஆண்டு முதல் இந்த போன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது – அதிர்ச்சியளிக்கும் செய்தி !

ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (09:31 IST)
ஆண்ட்ராய்டு பழைய வெர்ஷன்கள் மற்றும் ஐபோன் வெர்ஷன் உள்ள போன்களிலும் வாட்ஸ் ஆப் செயலி இயங்காது என சொல்லப்படுகிறது.

வாட்ஸ் ஆப் நிறுவனம் விண்டோஸ் மற்றும் பழைய ஆண்ட்ராய்டு ஆகியவற்றுடனான தங்கள் ஒப்பந்தத்தை நிறுத்த உள்ளது. அதன்படி, ஆண்ட்ராய்ட் 2. 3.7 ஆகிய வெர்சன்களில் வாட்ஸ் அப் இயக்காது. ஐபோன்களில் ஐஓஸ் 8 பிரிவிலும் வாட்ஸ் அப் செயலி அடுத்த ஆண்டில் இருந்து இயங்காது. 

அதேபோல விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள போன்களிலும் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் வாட்ஸ் ஆப் இயங்காது. இந்த வெர்ஷன் மொபைல்களை உபயோகிப்பவர்கள் எக்ஸ்போர்ட் செய்து தங்கள் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்ட் 4.0.3, அதற்கு அதிகமான வெர்ஷன்களிலும், ஐபோன் ஐஓஸ்9 அதற்கு அதிகமான வெர்ஷன்களிலும் வாட்ஸ் அப் தன்னுடைய மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்