லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு சோப் டெலிவரி: ப்ளிப்கார்ட் தில்லாலங்கடி!

வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (11:29 IST)
ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை சில தினங்களுக்கு முன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.


ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை கடந்த 23 ஆம் தேதி முதல் துவங்கியது. இந்த விற்பனையில் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான பொருட்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இந்த சிறப்பு விற்பனையை பலர் பயன்படுத்திக்கொண்டனர்.

அந்த வகையில் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு ப்ளிப்கார்ட் சார்பில் சோப் டெலிவர் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ளிப்கார்ட் தளத்தில் உள்ள "ஓபன் பாக்ஸ்" திட்டத்திலேயே இந்த ஆர்டர் புக் செய்யப்பட்டது.

இருப்பினும் டெலிவரியை மாணவனின் தந்தை பெற்றதால், பிரித்து பார்க்காமல் வாங்கியுள்ளார். டெலிவரி செய்த நபருக்கு இது குறித்து தெரியாமல் போனதால் பார்சல் சரிப்பார்க்காமல் வழங்கப்பட்டுவிட்டது. இது குறித்து மாணவன் ப்ளிப்கார்ட் சேவை மைய அதிகாரியிடம் பேசிய போது பணம் திருப்பி தரப்பட மாட்டாது என ப்ளிப்கார்ட் அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

பின்னர் ப்ளிப்கார்ட் இந்த வாடிக்கையாளருக்கு பணத்தை திரும்ப வழங்குவதற்கான பணிகளை துவங்கி இருப்பதாக தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.

Edited By: Sugapriya Prakash

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்