ரிலையன்ஸ் ஜியோவின் கட்டணமில்லா புதிய சலுகைகள்

வியாழன், 1 செப்டம்பர் 2016 (13:18 IST)
ரிலையன்ஸ் ஜியோவின் சேவை வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி முதல் தொடங்கும் என்பதையும், அதன் கட்டணமில்லா புதிய சலுகைகளையும் முகேஷ் அம்பானி அறிவித்தார்.


 

 
ரிலையன்ஸ் ஜியோ சேவையின் தொடக்க தேதியையும், அதன் கட்டண சலுகையையும் அதிகாரப்பூர்வமாக ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி இன்று மும்பையில் அறிவித்தார்.
 
எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ கடந்த மாதம் சோதனை முயற்சியில் அளவில்லா டேட்டே சேவை வழங்கியது. அதில் அனைவரையும் ரிலையன்ஸ் ஜியோ ஈர்த்துள்ளது.
 
மேலும் பல சலுகைகளை தற்போது ரிலையன்ஸ் ஜியோவில் அறிமுகப்படுத்தியுள்ளனர். புதிதாக ஜியோ ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
 
செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 31 டிசம்பர் 2017 வரை ஆப் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. ஜியோ ஆப்-இன் ரூ.1250 மதிப்புள்ள ஒரு வருட சந்தா கட்டணம் இலவச வழங்கப்படுகிறது.
 
ஆப் அழைப்பு வசதி, இந்தியா முழுவதும் இலவச ரோமிங் வசதி மற்றும் 1GB டேட்டா ரூ.50க்கு வழங்கப்படுகிறது. 
 
LYF 4G ஸ்மார்ட்போன்கள் ரூ.2,999க்கு ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து சந்தையில் விற்கப்படுகிறது. 
 
ரிலையன்ஸ் ஜியொக்கான டாரிப் பிளானையும் வெளியிட்டுள்ளது.


 

வெப்துனியாவைப் படிக்கவும்