ரிலையன்ஸ் ஜியோவிற்கு ஆட்டம் கொடுத்த மோடி அறிவிப்பு!!

திங்கள், 21 நவம்பர் 2016 (14:26 IST)
புதிய ஜியோ சிம் கார்டுகளின் விற்பனை குறையத் துவங்கியுள்ளது.  தற்சமயம் ஜியோ சிம் விற்பனையில் சுமார் 50 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது.




 
 
பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 தடை செய்யப்பட்டதாலேயே ரிலையன்ஸ் ஜியோ சிம் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்திருப்பதாக அறிக்கை வெளியாகி உள்ளது.
 
ஜியோ சிம் விற்பனைக்கும் ரூபாய் நோட்டு தடைக்கும் எவ்வித நேரடி தொடர்பும் இல்லையென்றாலும் ஜியோ சிம் கார்டை காட்டிலும் அன்றாடத் தேவைக்குப் பணம் அவசியம் என்பதால் மக்கள் வங்கி வாசலில் நின்று கொண்டிருக்கின்றனர்.
 
இந்த ஆண்டு இறுதிக்குள் 100 மில்லியன் என்ற வாடிக்கையாளர் எண்ணிக்கையை அடைய திட்டமிட்டிருந்த ஜியோவிற்கு ஏமாற்றம் கிடைக்கலாம் என்பதால் ஜியோ வெல்கம் ஆஃபர் மார்ச் 2016 வரை நீட்டிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்