வாட்ஸ் ஆப்புக்கு ஆப்பு: இந்தியாவின் புது மெசேஜிங் ஆப்...

வியாழன், 23 ஜனவரி 2020 (13:36 IST)
இந்திய அரசு வாட்ஸ் ஆப் போல துரித தகவல் சேவை செயலியை உருவாக்கும் சோதனையில் ஈடுப்பட்டுள்ளது. 

 
வாட்ஸ் ஆப் மெஸெஞ்சரை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியின் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், தொடர்புகள் ஆகியவற்றை அனுப்பலாம். இந்த வாட்ஸ் ஆப்பை பேஸ்புக் நிறுவனம் வாங்கிவிட்டது. 
 
இந்நிலையில், இந்தியா தனது சொந்தமான வாட்ஸ் ஆப் செயலியை உருவாக்கி வருகிறது. GIMS எனப்படும் இந்த அரசு துரித தகவல் சேவை செயலி தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள் மற்றும் துறைகளுக்கு இது பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும், ஆங்கிலம், இந்தி தவிர 11 இந்திய மொழிகளிலும் இந்த ஆப் விரிவுபடுத்தப்படும் என்பது கூடுதல் தகவல். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்