ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் க்ரூப் காலிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதே அம்சம் ஸ்கைப் மற்றும் ஹேங்அவுட்ஸ் உள்ளிட்ட தளங்களும் வழங்கி வருகின்றன.
ஃபேஸ்புக் வாசிகள் நேரடியாக க்ரூப் சாட் ஆப்ஷன் சென்றால் அங்கு காலிங் செய்யக் கோரும் அம்சத்தை பார்க்க முடியும். இத்துடன் இந்த வசதி வழங்கப்பட்டிருப்பதை தெரிவிக்கும் நோட்டிபிகேஷன் ஒன்றும் வழங்கப்பட்டிருக்கும்.
இதே க்ரூப் காலிங் அம்சம் சில மாதங்களுக்கு முன் மெசஞ்சர் செயலியிலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் க்ரூப் ஆடியோ காலிங் அம்சம் மட்டும் ஃபேஸ்புக் அறிவித்திருக்கிறது.
இதுதவிர விளம்பரங்களை மறைக்க கோரும் வசதியை வழங்குவது குறித்து ஃபேஸ்புக் பணியாற்றி வருகிறது.