ஜியோ இலவச இணைய சேவைக்கு ஆப்பு வைத்த அம்பானி!!

செவ்வாய், 3 ஜனவரி 2017 (12:52 IST)
ரிலையன்ஸ் ஜியோ வெல்காம் ஆஃபர் போன்றே நியூ இயர் ஆஃபரையும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.


 
 
புதிய வருடத்துடன் துவங்கியுள்ள ஜியோவின் நியூ இயர் ஆஃபர் மூலம் இலவசமாகக் குரல் அழைப்புகள், வீடியோ அழைப்புகள், தரவு, தகவல்கள் போன்ற சேவைகளைப் பயன்படுத்தலாம் ஆனால் அதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
நியூ இயர் ஆஃபரில் ஒரு நாளைக்கு 4 ஜிபி வரை இலவச இணையதள சேவையை பயன்படுத்தலாம் என்று இருந்தது இப்போது 1 ஜிபி ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
 
புதிய ஆஃபரின் விதிப்படி 1 ஜிபி தரவை 4ஜி வேகத்தில் பயன்படுத்தலாம், அதன் பிறகு 128Kbps வேகத்திற்குத் தரவின் வேகம் குறையும். இது புதிய சிம் வங்குபவர்களுக்கும் பொருந்தும்.
 
மேலும், குறைவான தரவு இருக்கும் பட்சத்தில் கூடுதல் தரவை கட்டணம் செலுத்தி பெற வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு ஜிபி கூடுதல் தரவு வேண்டும் என்றால் பயன்படுத்தலாம். 301 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 6 ஜிபி கூடுதல் தரவை 28 நட்களுக்குப் பெறலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்