ஐபோன்களுக்கு ரூ.7000 வரை கேஷ்பேக்; ஆப்பிள் நிறுவனம் அதிரடி
வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (20:48 IST)
ஆப்பிள் நிறுவனத்தின் குறிப்பிட்ட ஐபோன் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி வரி உயர்த்தப்படுவதாக 2018-2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆப்பிள் சாதனங்கள் விலை உயர்ந்தது. இதனால் ஆப்பிள் விரும்பிகள் மிக வருத்தத்தில் இருந்தனர்.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்ட ஐபோன்களுக்கு சிறப்பு கேஷ்பேக் மற்றும் தள்ளுபடி அறிவித்துள்ளனர். ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஆப்பிள் நிறுவனம் இணைந்து தேர்வு செய்யப்பட்ட ஐபோன்களுக்கு மாத தவணை முறையில் கேஷ்பேக் அறிவித்துள்ளது.
ஐபோன் 6 மற்றும் ஐபோன் எஸ்.இ மாடல்களுக்கு ரூ.7000 வரை கேஷ்பேக் பெற முடியும். ஹெச்டிஎப்சி கிரேடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை ஆப்பிள் ஆப்லைன் விற்பனை மையங்களில் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் 14ஆம் தேதி பெற முடியும்.