ஜியோவின் புதிய அறிவிப்புக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல்

சனி, 7 ஜூலை 2018 (19:09 IST)
ஜியோ ஜிகாஃபைபர் சேவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் பாரதி ஏர்டெல் நிறுவன பிராட்பேன்ட் சலுகைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இரண்டு நாட்களுக்கு முன் ஜிகா ஃபைபர் பிராட்பேன்ட் சேவை குறித்த அறிவிப்பை வெளியிட்டது. ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி முதல் இதற்கான முன்பதிவு தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 
 
இந்த அறிவிப்பு தற்போது பிராட்பேண்ட் சேவையில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஆப்பு வைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ஜியோவின் அறிவிப்புக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது.
 
ஐதராபாத் நகரில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளிலும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. ஐதராபாத்தில் ரூ.349 பிராட்பேன்ட் சேவையை தேர்வு செய்வோருக்கு 8Mbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்படுகிறது. தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் மட்டும் வணிகமில்லா பயன்பாடுகளுக்கு அன்லிமிட்டெட் சலுகைகள் வழங்கப்படுகின்றன. 
 
அன்லிமிட்டெட் டேட்டா சலுகையில் முதற்கட்டமாக ஐதராபாத் நகரில் ஏர்டெல் நிறுவனம் ரூ.349, ரூ.449, ரூ.699 மற்றும் ரூ.1,299 விலையில் நான்கு சலுகைகளை அறிவித்திருக்கிறது. கடந்த மாதம் ஏர்டெல் பிராட்பேன்ட் சேவைகளை ஒரு வருடத்திற்கு வாங்குவோருக்கு 20% தள்ளுபடி வழங்குவதாக ஏர்டெல் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்