ஆதார் இல்லையா... இனி உங்கள் ஏர்டெல், ஐடியா சிம் வேலை செய்யாது!!

புதன், 31 மே 2017 (10:20 IST)
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு சந்தாதார்களும் விரைவில் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.  


 
 
இதற்கான பணிகள் ஒரு மாதத்தில் துவங்கும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்களும் அறிவித்துள்ளது. 
 
இதற்கு 1000 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவு ஆகும் என்றும் தெரிகிறது. தற்போது, ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குக் ஆதார் எண் சரிபார்ப்புச் செய்ய வேண்டும் குறுந்தகவல்கள் அனுப்பிய வண்ணம் உள்ளன.
 
நிறுவனங்களின் ஸ்டோர்களிலும் இது குறித்த விளம்பரப் பலகைகளும் வைத்துள்ளன. தொலைத்தொடர்பு துறை வெளியிட்ட அறிக்கையில் 2018 பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் ஆதார் விவரங்களைப் பெற வேண்டும் என்று அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்