சமூக வலைத்தளம் துவங்கியது மைக்ரோசாப்ட்!

வியாழன், 24 மே 2012 (18:23 IST)
உலகம் முழுதும் கடுமையாக பிரபலமடைந்து வரும் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தையடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனமும் சமூக வலைத்தளம் ஒன்றைத்துவங்கியுள்ளது.

So.cl என்ற இந்த சமூக வலைத்தளத்தை 'சோசியல்' என்று உச்சரிக்கவேண்டும். பேச்புக் பரவலான மக்களை ஈர்த்துள்ளது என்றால். இது மாணவர்களை இலக்காகக் கொண்டு துவங்கப்பட்டுள்ளது.

மாண்வர்கள் கல்வி, பொழுதுபோக்கு, அறிவு சம்பந்தமான தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வலைத்தளத்தில் உள்ள தேடல் எந்திரத்தில் உங்களுக்குப் பிடித்தமான எந்த ஒரு தலைப்பையும் டைப் செய்தால் அது தொடர்பான விஷயங்களை அது கொண்டு வந்து கொட்டும். இதனை வைத்து நண்பர்களுடன் விவாதிக்கலாம். இதே துறைகளில் ஆர்வம் உள்ள பிறரும் இதில் இணைந்து கொள்ளலாம்.

'வீடியோ பார்ட்டி' என்பதில் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்ளலாம். அதாவது தேடல் மற்றும் சமூக நெட்வொர்க்கிங் இரண்டையும் சேர்த்துத் தருவதன் மூலம் கற்றலை வளர்த்துக் கொள்ளமுடியும் என்கிறது மைக்ரோசாப்ட்.

இந்த வலைத்தளத்தில் நுழைய ஒருவர் வின்டோஸ் லைவ் அல்லது பேஸ்புக் கணக்கு விவரங்களைப் பயன்படுத்தலாம். லாக் இன் செய்த பிறகு பல விஷயங்கள் காணக்கிடைக்கும் அதன் பிறகு தேர்வு செய்து மேலும் உள்ளே செல்லலாம்.

மேலும் சில புதிய மேம்பாடுகள் இந்த சமூகவலைத்தள பிரயாணத்தை சுவாரசியமாக மாற்றும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்