நாகூரில் சந்தனக் கூடு ஊர்வலம்

வியாழன், 4 ஜூன் 2009 (11:45 IST)
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்காவின் 452-ம் ஆண்டு கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலம் நே‌ற்று இரவு வெகு ‌சிற‌ப்பாக நடைபெ‌ற்றது.

இ‌ஸ்லா‌மிய‌ர்க‌ளி‌ன் புகழ் பெற்ற ஆன்மிக வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகவும், மத நல்லிணக்க வழிபாட்டுத் தலமாகவும் போற்றப்படுவது நாகூர் பாதுஷா சாகிபு ஆண்டவர்கள் தர்கா.

இந்த தர்காவின் 452-ம் ஆண்டு கந்தூரி விழா மகோத்சவம் கடந்த மே 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஜூன் 1-ம் தேதி வாண வேடிக்கை நிகழ்ச்சியும், ஜூன் 2-ம் தேதி பீர் வைக்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊர்வலம் நே‌ற்று இரவு நடைபெற்றது.

சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், நாகை மீராப்பள்ளி வாசல் அருகிலிருந்து வாணவேடிக்கைகளுடன் சந்தனக் கூடு ஊர்வலம் தொடங்கியது. இ‌‌தி‌‌‌ல் ஏராளமான இ‌ஸ்லா‌மிய‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

கண்ணாடி மற்றும் ஜரிகை வேலைபாடுகளால் வடிவமைக்கப்பட்ட, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய சந்தனக் கூட்டில் சந்தனக் குடங்கள் வைக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

மனோரா மாதிரி வடிவங்கள், நகராமேடை உள்ளிட்ட அலங்கார வடிவங்கள் மின் விளக்குகளின் அலங்காரத்துடன் ஊர்வலத்தில் அணிவகுத்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்