ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விருவிருப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனி ஆக்ஷன் காட்டி வருகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மோசமான ஆட்டத்தால் தரவரிசையில் கடைசி இடத்திற்கு சென்ற சிஎஸ்கே இந்த சீசனில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வென்று முதல் இடத்தில் உள்ளது.
இதற்கு நேர்மாறாக நடப்பு சேம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி 3 போட்டிகளில் மட்டுமே வென்று தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்றை ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உள்ளது.