ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்கு

திங்கள், 19 ஏப்ரல் 2021 (21:31 IST)
ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை அணி.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் சில நிமிடங்களில் களத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் இரண்டு புள்ளிகள் பெற்று உள்ளது, ராஜஸ்தான் அணியும் அதேபோல் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி ஒரு தோல்வி பெற்று இரண்டு புள்ளிகள் பெற்று உள்ளது.

இன்றைய போட்டியில்  ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், சென்னை அணியினர் பேட்டிங்கில் அசத்தினர். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்கள் இலக்காக நிர்ணயித்தனர்.

ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை சேஸ் செய்யுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துள்ளனர்.
 

Den it was and so shall it be! The #SuperFam and super fans have always been and still will be with us forever! #AndhaNaalNyabhagam #CSKvRR #WhistlePodu #Yellove

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்