’’ரொம்ப நல்ல வெற்றி… ‘’சென்னை அணியை புகழ்ந்த முன்னாள் வீரர் !

வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (23:34 IST)
சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளதற்கு முன்னாள் வீரரும் சென்னை அணியை கடந்த ஐபிஎல் சீசனி பங்கமாக விமர்சித்தவருமான ஷேவாக் பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று சென்னை அணியுடன் பஞ்சாப் அணி மோதியது. இதில் சென்னை அணி அபார எவ்ற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று வலுவான பஞ்சாப் அணியுடன் சென்னை அணி மோதியது.

முதல் போட்டியில் தோல்வி என்பதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை இருந்தது.

பஞ்சாப் அணி 106 ரன்கள் எடுத்து 107 ரன்களை சென்னை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அடுத்து வந்த சென்னை அணி 15.3 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த இலக்கை அடித்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் கடைசி இடத்தில் இருந்த சென்னை அணி இந்த ஒரே போட்டியில் ஜெயித்ததன் வாயிலாக 2 வது இடத்திற்கு முன்னேறியது

இதுகுறித்து முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் வர்ணனையாளர் விரேந்தர் சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ரொம்ப நல்ல வெற்றி என்று கூறி சென்னை அணியின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

மேலும், சென்னை அணி மீண்டும் பழைய ஃபார்முக்குத் திரும்பியுள்ளதாகக்  கூறி விசில் போடு எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவீட் வைரலாகி வருகிறது.

Romba Nalla victory.
They are back. #WhistlePodu pic.twitter.com/7t3aLxMCbT

— Virender Sehwag (@virendersehwag) April 16, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்