இந்நிலையில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங் தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில், டூபிளஸிஸ் 50 ரன்களும், கொயீன் அலி 58 ரன்களும், எடுத்தனர். ரெய்னா 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.
பின்னர், அம்பதி ராயுடு 27 பந்துகளில் 72 ரன்கள் அடித்து தாண்டவம் ஆடினார். ஜடேஜா 22 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்து மும்பைக்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.