இந்நிலையில், கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்றநிலையில், அந்த ஓவரை வீச அஸ்வின் அழைக்கப்பட்டார். அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாலும் 5 வது பந்தில் ராகுல் திரிபாதி சிக்ஸர் அடித்து, கொல்கத்தா அணியை வெற்றி பெறச்செய்தார். இந்நிலையில், இந்த தோல்விக்கு அஸ்வின் தான் காரணம் எனப் பலரும் கூறி வருகின்றனர். இதில், சஞ்சய் மஞ்ரேக்கர், தான் உருவாக்கும் அணியின் அஸ்வின் இருக்க மாட்டார் . அவரது பந்து வீச்சில் சில வருடங்களாக முன்னேற்றம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.