இந்நிலையில் இதுகுறித்து வர்ணனை செய்த சுனில் கவாஸ்கர் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் தனிப்பட்ட வாழக்கையை கேலி செய்யும் விதமாக ஆபாசமாக பேசினார். அதில் ‘கோலி லாக்டவுன் சமயத்தில் அனுஷ்கா சர்மாவின் பந்துவீச்சில்தான் பயிற்சி செய்தார் போல’ எனக் கூறியிருந்தார். இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்த அவரை வர்ணனையாளர்கள் குழுவில் இருந்து நீக்கவேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்போது கவாஸ்கருக்கு பதிலளிக்கும் விதமாக அனுஷ்கா ‘மிஸ்டர் கவாஸ்கர் உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. நிச்சயமாக நீங்கள் வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்க முடியும். ஜெண்டில்மேன்களின் ஆட்டத்தில் உங்கள் பெயர் மிகப்பெரிய இடத்தில் உள்ளது.’ எனக் கூறியுள்ளார். கோலி 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் சரியாக விளையாடாத போதும் இதுபோல அனுஷ்கா சர்மா மேல் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.