நாற்காலியை உதைத்த கம்பிர்; அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்

புதன், 4 மே 2016 (14:49 IST)
வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் இருக்கையை உதைத்த கொல்கத்தா அணி கேப்டன் கவுதம் கம்பிருக்கு 15 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.
 

 
நேற்று முன்தினம் [02-06-16] அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக லோகேஷ் ராகுல் 32 பந்துகளில் [2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்] 52 ரன்களும், கேப்டன் விராட் கோலி 44 பந்துகளில் [4 பவுண்டரிகள்] 54 ரன்களும் எடுத்தனர்.
 
பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியில், கேப்டன் கவுதம் கம்பிர் 29 பந்துகளில் [4 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 37 ரன்களும் எடுத்தனர். ஆண்ட்ரூ ரஸ்ஸல் 24 பந்துகளில் [4 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 39 ரன்களும், கடைசியில் அதிரடியாக ஆடிய யூசுஃப் பதான் 29 பந்துகளில் [6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 60 ரன்களும் எடுத்தனர்.

மேலும் இந்த செய்தியை படிக்க: நடுவரை முறைத்த ஜடேஜா; கடும் தண்டனை கிடைக்கும் - ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை
 
கொல்கத்தா அணி வெற்றி பெற்றதை வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கேப்டன் கவுதம் கம்பிர் தனது இருக்கையை எட்டி உதைத்தார். இது, ஐபிஎல் விதிமுறைகளை மீறிய செயல் ஆகும். இதனால் ஒழுங்கு நடவடிக்கைப் படி, அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல, பெங்களூர் அணி பந்துவீச குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமாக எடுத்துக்கொண்டதால், 24 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்