இந்நிலையில் போட்டி குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் கூறுகையில், சென்னை அணியின் பந்துவீச்சு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த தவறிவிட்டனர். இதுவே வெற்றி வாய்ப்பை எங்களிடமிருந்து பறித்துவிட்டது என்றார். எங்கள் வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் மிக ஆக்ரோஷமாக செயல்படுவர் என்றார்.