நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டி மூலம் ரூ.2,500 கோடி வருவாய் கிடைத்துள்ளது. டெலிவிசன் ஒளிபரப்பு, விளம்பரங்கள், டிக்கெட் விற்பனை, பொருட்கள் விற்பனை மற்றும் பல்வேறு வகையான விளம்பரங்கள் மூலம் இந்த வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஐ.பி.எல். போட்டியைவிட பல மடங்கு அதிகமாகும்.
ஐ.பி.எல். போட்டியை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ஒளிபரப்பி வருகிறது. அந்த நிறுவனம் ஒரு ஆண்டுக்கு ரூ.820 கோடி வீதம் 10 ஆண்டுகளுக்கு ரூ.8,200 கோடிக்கு கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஐ.பி.எல். போட்டியின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 10 முதல் 12 சதவீதம் அதிகரித்து வருவதாக அமைப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.