இந்நிலையில் தோனியின் மனைவி சாக்ஷி தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘விளையாட்டில் ஒரு நாள் நீங்கள் வெல்வீர்கள், இன்னொரு நாள் தோற்பீர்கள். இத்தனை ஆண்டுகளில் நிறைய வெற்றிகளும் சில வேதனையான தோல்விகளும் சாட்சிகளாக உள்ளன. அதில் வெற்றியைக் கொண்டாடுகிறோம். தோல்விகளால் மனம் உடைந்து போகிறோம். யாரும் தோற்க விரும்புவதில்லை. அனைவராலும் வெற்றியாளர்களாக முடியாது. உண்மையான போராளிகள் போராடப் பிறக்கிறார்கள். நம் மனத்தில் அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ்களாக இருப்பார்கள்.’ எனக் கூறியுள்ளார்.